
the only TAMIZH MAGAZINE IN PRINT MEDIA,(Not Tamilnattu Magazine),Founded By ESPO , Edited by Chithan Prasadh. Anyone from anywhere can write on anything.Except personal attacks on anyone including the poor writers.
Sunday, July 27, 2008
Monday, July 14, 2008
சிங்கப்பூர் வருகை-எஸ்.ராமகிருஷ்ணனுடன் சந்திப்பு-1
சிங்கப்பூர் வந்து சேர்ந்ததும் அங்குள்ள மனிதர்கள் கொஞ்சம் விலகியே கானப்பட்டார்கள். இரண்டு பேரிடம் தேசிய நூலகத்திற்குச் செல்ல வழி கேட்டேன். ஆளுக்கு ஒருதிசையில் வழி காட்டிவிட்டு (ஒருவேளை சிரித்துக் கொண்டே) நழுவிவிட்டார்கள். ஒரு சீனந்தான் பிறகு சரியான பாதையைச் சுட்டிக் காட்டினான்.பாண்டித்துரை (நாம் இதழின் ஆசிரியர்) அங்கு வந்து சேரும்வரை நூலத்தினுள்ளே உழாவிக் கொண்டிருந்தேன். கையில் ஒரு கறுப்பு பேக்குடன்.யாராவது சந்தேகம்படும்படி என்னைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்களா என்று அவ்வப்போது தலையைத் தூக்கி சுற்றிலும் பார்த்துக் கொண்டேன்.எல்லோரும் தரையிலும் நாற்காலியிலும் நின்று கொண்டும் வாசித்துக் கொண்டே இருந்தார்கள். இப்படியொரு பிரமாண்டமான நூலகத்தை நான் இதுவரை பார்த்ததில்லை என்றுதான் கூறவேண்டும்.ஓவியக் கலை பகுதியிலுள்ள புத்தகங்களை அலசிப் பார்த்தேன். காலங்களின் நிறங்கள் என்ற புத்தகம் அதிசியிக்க வைத்தது. அந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் கதவுகளின் தோற்றம் இடத்திற்கு இடமும் காலத்திற்குக் காலமும் மாறுப்பட்டுக் கொண்டே வந்தது. அந்தக் கதவுகளின் நிறங்கள் காலத்தைவிடவும் மக்களின் வர்ணங்களைத்தான் பிரதிப்பலிப்பதாகப் பட்டது.பாண்டித்துரை வந்ததும் நூலகத்திற்கு வெளியிலுள்ள கடையில் அமர்ந்து குளிர்பானம் அருந்தினோம். உயிரேழுத்து இதழை எனக்காக ஒன்று வாங்கி வந்திருந்தார். அதில் என் சிறுகதை ஒன்று பிரசுரிக்கப்பட்டிருந்தது. பார்த்ததும் மகிழ்ச்சி.புதுமைப்பித்தன் சொல்வது போல இரும்பு நாகரிகம் ஒன்றை கண்ணாடி நாகரிகமாகப் பார்த்தேன். நெடுக வளர்ந்து அந்தக் கண்ணாடி உடலில் கவர்ச்சியான இயந்திரங்களும் அந்த இயந்திரங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களும் எங்கும் இருந்தார்கள். மலேசியாவிலும் இது போல இருக்கிறதுதான். இருந்தாலும் வளர்ச்சி நிலைகளில் எங்கேயாவது வேறுபாடுகள் உருவாகியிருக்கக்கூடும்.பாண்டித்துரை இரவல் பெற்ற புத்தகங்களை ஒரு இயந்திரத்தின் வாயில் நுழைத்தார். எட்டிப் பார்த்தேன். உள்ளே அதைப் பெற்றுக் கொள்ள யாரும் இல்லை. "books recieved" என்ற பதில் இயந்திரத்தின் முகத்தில் பளிச்சிட்டது. இயந்திரம் புத்தகங்களை விழுங்கிக் கொண்டது. அவ்வளவுதான் இரவல் பெற்ற புத்தகங்களைத் திரும்பி தரும் உத்தி.சிறிது நேரம் பேசியிருந்துவிட்டு அவரே என்னை தமிழ்ப் புத்தகங்கள் உள்ள பகுதிக்கு அழைத்துச் சென்றார். மீண்டும் ஒரு பிரமிப்பு எனக்காகக் காத்திருந்தது புத்தக அடுக்குகளின் இடுக்குகளில். மொத்தமாக தமிழ் புத்தங்கங்களை இப்படியொரு எண்ணிக்கையில் நான் பார்த்ததில்லைதான். கைகளில் தொட்ட முதல் புத்தகமே பிரமிள் படைப்புகள் என்று போட்டிருந்தது. சிங்கப்பூர் எழுத்தாளர் கண்ணபிரான் அவர்களும் எங்களுடந்தான் இருந்தார். பிரமிள் படைப்புகள் தரமானவை என்று ஏற்கனவே எனக்குத் தெரிந்த ஒன்றைப் புருவம் உயர்த்திக் கூறினார். தீவிர எழுத்தாள்கள் எழுத்தாளர்கள் எல்லாரின் புருவத்தையும் உயார்த்ட்திவிடுவார் பிரமிள். போறாமையாகா இருந்தது. எங்கள் ஊரில் இந்த மாதிரி புத்தகங்கள் கிடைப்பது அரிது.
ஒவ்வெரு புத்தகங்களையும் தொட்டுப் பார்த்தேன். எங்கோ மனம் வலித்தது. பெரிய இடைவெளியில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். முனைவர் லட்சுமி அவர்கள் என் கையில் வைத்திருந்த பிரமிள் படைப்புகள் புத்தகத்தை வாங்கிக் கொண்டார். இரவல் பெறப் போவதாகக் கூறினார். பிரமிள் கையிலிருந்து நழுவுவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்
ஒவ்வெரு புத்தகங்களையும் தொட்டுப் பார்த்தேன். எங்கோ மனம் வலித்தது. பெரிய இடைவெளியில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். முனைவர் லட்சுமி அவர்கள் என் கையில் வைத்திருந்த பிரமிள் படைப்புகள் புத்தகத்தை வாங்கிக் கொண்டார். இரவல் பெறப் போவதாகக் கூறினார். பிரமிள் கையிலிருந்து நழுவுவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்
-தொடரும்-
கே.பாலமுருகன்
கே.பாலமுருகன்