the only TAMIZH MAGAZINE IN PRINT MEDIA,(Not Tamilnattu Magazine),Founded By ESPO , Edited by Chithan Prasadh. Anyone from anywhere can write on anything.Except personal attacks on anyone including the poor writers.
Thursday, November 27, 2008
Saturday, November 22, 2008
Wednesday, November 5, 2008
Monday, October 20, 2008
Saturday, September 27, 2008
Tuesday, September 2, 2008
தமிழாசிரியர்களுக்கான இலக்கியக் கருத்தரங்கம்
தமிழாசிரியர்களுக்கான இலக்கியக் கருத்தரங்கம்
மலேசிய சுங்கைப்பட்டாணியில் தமிழாசிரியர்களுக்காகவும் பயிற்சி ஆசிரியர்களுக்காகவும் இலக்கிய கருத்தரங்கம் கடந்த ஆகஸ்ட் 2ஆம் திகதி ஆசிரியர் பயிற்சிக் கழகத்தில் நடைபெற்றது. மலேசியாவின் சிறந்த இலக்கியப் பேச்சாளர்களான டாக்டர்.மா.சண்முக சிவா, முனைவர் ரெ.கார்த்திகேசு மேலும் முன்னால் தலைமை ஆசிரியர் கோ.புண்ணியவான் அவர்களும் கலந்து கொண்டு வெவ்வேறு தலைப்புகளில் உரை நிகழ்த்தினர்.
பெரும்பாலும் மூவரின் பேச்சும் வாசிப்பின் தனித்துவத்தைப் பற்றியும் ஆக்கச் சிந்தனைகளைக் குறித்த மீள்பார்வை பற்றியும் பரவலான முறையில் இருந்தது.
தமிழாசிரியர்கள் இலக்கியத்தில் ஈடுபடுவதற்கான முக்கியத்துவங்கள் குறித்தும் சிறுகதை ஆசிரியர்களின் எழுத்தைப் பற்றியும் அவர்களைப் பற்றிய விளக்கங்களுடனும் ரெ.கார்த்திகேசு அவர்கள் சிறப்பாக உரையாற்றினார். சிறுகதை படைப்பிலக்கியம் பற்றிய நுட்பங்களையும் பல்வேறு சிறுகதை ஆசிரியர்களின் சிறுகதைகளையும் அதன் பன்முகத்தன்மையும் சான்றாகக் காட்டி வாசிப்பின் முக்கியத்துவத்தைத் தெளிவுப்பட எடுத்துரைத்தார்.சிந்தனை மாற்றம் நம்மை தனித்து அடையாளம் காட்டுவதோடு மனிதத் தன்மையை வளர்க்கக்கூடியது என்று டாக்டர் மா.சண்முக சிவா அவர்கள் தனது உரையில் கூறினார்.
சுவாரிஷயமான உதாரண கதைகளுடன் உரையைத் துவக்கிய கோ.புண்ணியவான் அவர்கள் நவீன காலம் இலக்கியத்திலிருந்து விடுபட்டு வரும் சூழலில் இலக்கியத்தில் ஈடுபடுவது மிகவும் தேவையாகவே இருப்பதாகக் குறிப்பிட்டார்.
மூன்று முக்கிய எழுத்தாளர்களையும் கொண்ட கருத்தரங்கம் மாலை மணி 2வரை நீடித்து நல்லதோர் அனுபவத்தை வந்திருந்த தமிழாசிரியர்களுக்கும் ஆசிரியர் பயிற்சியில் உள்ள மாணவர்களுக்கும் அளித்திருந்தது.
சிறுகதை படைப்பிலக்கியம் பற்றிய மூன்று எழுத்தாளர்களின் வெவ்வேறு கோணங்களில் உரை நிகழ்த்தப்பட்ட பிறகு ஆசிரியர்களிடமிருந்தும் பயிற்சி ஆசிரியர்களிடமிருந்தும் சிஅல் நுட்பமான வினாக்கள் கேட்கப்பட்டன. ந்த வினாக்கள் அவர்களின் ஆர்வத்தைப் பிரதிப்பலிப்பவையாக ருந்தன. சமீப கால லக்கியத்தில் பேச்சு மொழி கொச்சையாகப் பயன்படுத்தப்பட்டதைப் பற்றி ஒரு வினா எழுந்தது. யதார்த்த உலகில் அசலான வாழ்க்கையின் மறுபதிவாகவே நவீன லக்கியம் படைக்கப்படுவதால் பேச்சு மொழியைப் பயன்படுத்துவது அது தன் நிதர்சனத்தன்மையைக் கொண்டுள்ளது என்று கோ.புண்ணியவான் அவர்கள் பதில் அளித்தார். பள்ளி ஆசிரியை ஒருவர் சா.கந்தசாமி எழுதிய ஒரு வருடம் சென்றது எனும் கதையில் வருவது போல ன்றைய வன்முறை சூழலுக்குப் பரிச்சியமான மாணவர்களின் பண்பை மாற்றுவது எப்படி என்ற கேள்வியை எழுப்பினார். டாக்டர் சண்முகசிவா அவர்கள் பதிலளிக்கையில் மாணவர்களின் பல்வகையான உளவியல் தன்மையை உள்வாங்கிக் கொண்டு அதற்கேற்ப செயல்படுவது நல்ல ஆசிரியரின் பொறுப்பாக ருக்க வேண்டும் எனவும் மேலும் மனிதனின் உளவியல் நிலை புறச்சூழலுகேற்ப மாறுபட்டுக் கொண்டேருப்பதால் அதற்கேற்ப நாமும் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் தமிழ்த் துறை தலைவர் திரு.அ.பன்னனீர் செல்வம், விரிவுரையாளர்கள் திரு.ப.தமிழ் மாறன், திரு.கோபாலா கிருஷ்ணன் திரு.பாஸ்கரன் அவர்களும் கெடா மாநில தமிழ்ப்பள்ளி அமைப்பாளர் திரு.ராம கிருஷ்ணன் அவர்கள், கோலா மூடா மாவட்ட தமிழ்ப்பள்ளிகளின் மேலாளர் திரு.அர்ஜுனன் அவர்கள், கோலா மூடா தமிழ் மொழி பாடக்குழு தலைவர் திரு.மா.அம்பிகாபதி அவர்களும் மிகவும் ஆர்வத்துடன் தங்கள் பங்களிப்பைச் செய்தனர்.

கே.பாலமுருகன்
மலேசியா
Sunday, July 27, 2008
Monday, July 14, 2008
சிங்கப்பூர் வருகை-எஸ்.ராமகிருஷ்ணனுடன் சந்திப்பு-1
சிங்கப்பூர் வந்து சேர்ந்ததும் அங்குள்ள மனிதர்கள் கொஞ்சம் விலகியே கானப்பட்டார்கள். இரண்டு பேரிடம் தேசிய நூலகத்திற்குச் செல்ல வழி கேட்டேன். ஆளுக்கு ஒருதிசையில் வழி காட்டிவிட்டு (ஒருவேளை சிரித்துக் கொண்டே) நழுவிவிட்டார்கள். ஒரு சீனந்தான் பிறகு சரியான பாதையைச் சுட்டிக் காட்டினான்.பாண்டித்துரை (நாம் இதழின் ஆசிரியர்) அங்கு வந்து சேரும்வரை நூலத்தினுள்ளே உழாவிக் கொண்டிருந்தேன். கையில் ஒரு கறுப்பு பேக்குடன்.யாராவது சந்தேகம்படும்படி என்னைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்களா என்று அவ்வப்போது தலையைத் தூக்கி சுற்றிலும் பார்த்துக் கொண்டேன்.எல்லோரும் தரையிலும் நாற்காலியிலும் நின்று கொண்டும் வாசித்துக் கொண்டே இருந்தார்கள். இப்படியொரு பிரமாண்டமான நூலகத்தை நான் இதுவரை பார்த்ததில்லை என்றுதான் கூறவேண்டும்.ஓவியக் கலை பகுதியிலுள்ள புத்தகங்களை அலசிப் பார்த்தேன். காலங்களின் நிறங்கள் என்ற புத்தகம் அதிசியிக்க வைத்தது. அந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் கதவுகளின் தோற்றம் இடத்திற்கு இடமும் காலத்திற்குக் காலமும் மாறுப்பட்டுக் கொண்டே வந்தது. அந்தக் கதவுகளின் நிறங்கள் காலத்தைவிடவும் மக்களின் வர்ணங்களைத்தான் பிரதிப்பலிப்பதாகப் பட்டது.பாண்டித்துரை வந்ததும் நூலகத்திற்கு வெளியிலுள்ள கடையில் அமர்ந்து குளிர்பானம் அருந்தினோம். உயிரேழுத்து இதழை எனக்காக ஒன்று வாங்கி வந்திருந்தார். அதில் என் சிறுகதை ஒன்று பிரசுரிக்கப்பட்டிருந்தது. பார்த்ததும் மகிழ்ச்சி.புதுமைப்பித்தன் சொல்வது போல இரும்பு நாகரிகம் ஒன்றை கண்ணாடி நாகரிகமாகப் பார்த்தேன். நெடுக வளர்ந்து அந்தக் கண்ணாடி உடலில் கவர்ச்சியான இயந்திரங்களும் அந்த இயந்திரங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களும் எங்கும் இருந்தார்கள். மலேசியாவிலும் இது போல இருக்கிறதுதான். இருந்தாலும் வளர்ச்சி நிலைகளில் எங்கேயாவது வேறுபாடுகள் உருவாகியிருக்கக்கூடும்.பாண்டித்துரை இரவல் பெற்ற புத்தகங்களை ஒரு இயந்திரத்தின் வாயில் நுழைத்தார். எட்டிப் பார்த்தேன். உள்ளே அதைப் பெற்றுக் கொள்ள யாரும் இல்லை. "books recieved" என்ற பதில் இயந்திரத்தின் முகத்தில் பளிச்சிட்டது. இயந்திரம் புத்தகங்களை விழுங்கிக் கொண்டது. அவ்வளவுதான் இரவல் பெற்ற புத்தகங்களைத் திரும்பி தரும் உத்தி.சிறிது நேரம் பேசியிருந்துவிட்டு அவரே என்னை தமிழ்ப் புத்தகங்கள் உள்ள பகுதிக்கு அழைத்துச் சென்றார். மீண்டும் ஒரு பிரமிப்பு எனக்காகக் காத்திருந்தது புத்தக அடுக்குகளின் இடுக்குகளில். மொத்தமாக தமிழ் புத்தங்கங்களை இப்படியொரு எண்ணிக்கையில் நான் பார்த்ததில்லைதான். கைகளில் தொட்ட முதல் புத்தகமே பிரமிள் படைப்புகள் என்று போட்டிருந்தது. சிங்கப்பூர் எழுத்தாளர் கண்ணபிரான் அவர்களும் எங்களுடந்தான் இருந்தார். பிரமிள் படைப்புகள் தரமானவை என்று ஏற்கனவே எனக்குத் தெரிந்த ஒன்றைப் புருவம் உயர்த்திக் கூறினார். தீவிர எழுத்தாள்கள் எழுத்தாளர்கள் எல்லாரின் புருவத்தையும் உயார்த்ட்திவிடுவார் பிரமிள். போறாமையாகா இருந்தது. எங்கள் ஊரில் இந்த மாதிரி புத்தகங்கள் கிடைப்பது அரிது.
ஒவ்வெரு புத்தகங்களையும் தொட்டுப் பார்த்தேன். எங்கோ மனம் வலித்தது. பெரிய இடைவெளியில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். முனைவர் லட்சுமி அவர்கள் என் கையில் வைத்திருந்த பிரமிள் படைப்புகள் புத்தகத்தை வாங்கிக் கொண்டார். இரவல் பெறப் போவதாகக் கூறினார். பிரமிள் கையிலிருந்து நழுவுவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்

-தொடரும்-
கே.பாலமுருகன்
கே.பாலமுருகன்
Sunday, June 8, 2008
Friday, June 6, 2008
கவிதை
எனக்கு தினம் பல குரல்கள் கேட்கின்றன
யாரும் என்னைச் சுற்றி இல்லாத போதும்
அவற்றில் பெரும்பான்மையானவை ஒரு அழுகுரலாகவோ
பெருங்குரலில் வெளிப்படும் புலம்பலாகவோ
நான் அதுவரை அறிந்திராத ஒரு வசவாகவோ
ஈனமான குரலாகவோ தான் இருக்கின்றன.
காதுகளை அழுந்த மூடிக்கொண்ட பின்னரும்
யாருமற்ற வெளியில் சிறைப்படுத்திக் கொண்ட போதும் தொடர்ந்து கேட்டுக் கொண்டேதான் இருக்கின்றன.
நீரற்ற ஒரு மண் பாத்திரத்தில் என்னைப் புதைத்துக்கொண்ட பின்னரே சத்தம் கொஞ்சம் நின்றது
என் செயலற்ற மௌனத்தால் நான் எல்லோருக்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன்
எல்லோருக்கும் எதோ ஒரு குரல் கேட்கிறது
வணக்கம் சந்திர சேகரன் கிருஷ்ணன் ,
மௌனத்திலும் மனதை அழுத்தி
குரல் பிசையத்தான் செய்கிறது
யாருக்காவது எங்காவது என்றாவது
திறக்காதா செவிப்பறையை
------------------
தேங்க்ஸ் கிருஷ்ணா
Sunday, May 4, 2008
வி என் மதியழகன் புத்தக வெளியீடு

சென்னையில் சித்தன் கலைகூடத்தின் முதல் வெளியீடாக வி என் மதியழகன் எழுதிய என் மன ப பதிவுகள் என்கிற புத்தகத்தை நல்லி குப்புசாமி செட்டி வெளியிட ஜெயகாந்தன் பெற்றுக்கொண்டார். இந்திர பார்த்தசாரதி, espo ,பழமலை, பாலரமணி ,சித்ரா ,கோரி உரையாற்றினர்
Wednesday, April 30, 2008
Nilaigalukku thirumbuvom

நிலைகளுக்கு த திரும்புவோம் ---மே இதழ் யுகமாயினியில் செந்தமிழன் எழுதி இருக்கிறார் . கீதாரிகளின் நிலையுடன் செல் அல்லது மொபைல் தொலைபேசி பயன்பாட்டை ஒப்பிட்டு நவீன தொழில் நுட்பம் மனிதனை சீரழிக்கிறது என்கிற கருத்தினை முன் வைக்கிறார். Era முருகன் இதை ஒப்புக்கொள்ள மறுத்து எதிர் வினை எழுதுகிறேன் என்றார் .நீங்களும் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப பதிவு செய்யுங்கள் .
Sunday, April 27, 2008
May issue---announcements

Oh! After giving pages to short stories & kurunovels, I decided to venture further.Yes! I am publishing a serialised novel by CHENGAI AZHIYAN from jaffna, titled - KADALUM KARAIYIL SILA MANITHARGALUM--I know some of you wont beleive & i hear others murmer 'How dare'---Anyway , wish me good luck