Friday, June 6, 2008

கவிதை

எனக்கு தினம் பல குரல்கள் கேட்கின்றன
யாரும் என்னைச் சுற்றி இல்லாத போதும்
அவற்றில் பெரும்பான்மையானவை ஒரு அழுகுரலாகவோ
பெருங்குரலில் வெளிப்படும் புலம்பலாகவோ
நான் அதுவரை அறிந்திராத ஒரு வசவாகவோ
ஈனமான குரலாகவோ தான் இருக்கின்றன.
காதுகளை அழுந்த மூடிக்கொண்ட பின்னரும்
யாருமற்ற வெளியில் சிறைப்படுத்திக் கொண்ட போதும் தொடர்ந்து கேட்டுக் கொண்டேதான் இருக்கின்றன.
நீரற்ற ஒரு மண் பாத்திரத்தில் என்னைப் புதைத்துக்கொண்ட பின்னரே சத்தம் கொஞ்சம் நின்றது
என் செயலற்ற மௌனத்தால் நான் எல்லோருக்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன்
எல்லோருக்கும் எதோ ஒரு குரல் கேட்கிறது

வணக்கம் சந்திர சேகரன் கிருஷ்ணன் ,

மௌனத்திலும் மனதை அழுத்தி

குரல் பிசையத்தான் செய்கிறது

யாருக்காவது எங்காவது என்றாவது

திறக்காதா செவிப்பறையை

------------------

தேங்க்ஸ் கிருஷ்ணா