Tuesday, September 29, 2009

பதிவர்களுக்கு ஓர் வேண்டுகோள்
சமீபத்தில் மறைந்த கவிஞர்.வெங்கட் தாயுமானவன் அவர்களின் அஞ்சலியும் புத்தக வெளியீடும் டிசம்பர் 17ம் தேதி சித்தன் கலைக்கூடம் முன்னெடுப்பில் நடைபெறவிருக்கிறது. அவர் பயன்படுத்திய வலைத்தளத்திற்கான சுட்டிகள் கீழே:

www.kvthaayumaanavan.blogspot.com
www.kvthaayu.blogspot.com

http://groups.google.com/group/palsuvai

http://groups.google.co.in/group/clapboard

http://groups.google.com/group/kamathenu


கடந்த சில வருடங்களாக புற்றுநோயில் துயரப்பட்டு மருத்துவர்களால் கைவிடப்பட்ட நிலையிலும் தன்னுடைய இலக்கிய முனைப்புக்களையும்,திரைப்பட எதிர்பார்ப்புகளையும் கைவிடாது இறுதிவரை தன் மூச்சென கருதிய இலக்கிய போராளி அவர்.

தற்போது அவருடைய மனைவி திருமதி.அன்புக்கரசி வெங்கட்தாயுமானவன் அவர்களுடன் கலந்தாலோசித்த பிறகு வெங்கட் தாயுமானவனுடைய பிறந்தநாளும்,மணநாளுமான டிசம்பர் 17 அன்று அஞ்சலி கூடலும் அவரது கவிதை தொகுப்பு வெளியிடலும் தீர்மானமாகியது.

இந்த இலக்கினை நோக்கி நகரும் வேளையில் புத்தக தயாரிப்பிலும் அஞ்சலி செலுத்துவதிலும் பதிவர்களாகவும் ஒரு இலக்கியவாதியின் பிரிவை நினைவூட்டுபவர்களாகவும் உள்ள நாம் அனைவரும் ஒருங்கிணைந்து இந்த புத்தகத்தை பிரசுரித்து,பிரசுர காப்புரிமையும் எதிர்கால தமிழக அரசு நூலக ஆணை உரிமையும் அவருடைய மனைவியிடம் ஒப்படைத்தோம் எனில் எதிர்காலத்தில் அது அவர்களுக்கு ஒரு சிறிய பொருளாதார உதவியை அளிக்கக்கூடும்.

இம்முயற்சிகளுக்கு ஆகும் மொத்த செலவுத்தொகையை(உத்தேசமாக ரூ.25,000) பதிவர்களாகிய நாம் பகிர்ந்துகொள்வோம்.பதிவர்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட பங்களிப்பாக தங்களால் முடிந்த பொருளுதவியை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

முன்னெடுப்போர்:

"யுகமாயினி" சித்தன்: 9382708030
கவிஞர்.அன்பாதவன்: 9500102765
கவிஞர்.அரங்க மல்லிகா: 9842979756

(பணம் செலுத்தவேண்டிய வங்கிக்கணக்கு விவரங்கள் நாளை இங்கே பதிவேற்றப்படும்)

Tuesday, August 25, 2009

Monday, August 3, 2009

Monday, July 13, 2009

சென்னை இலக்கியக்கூடல் புகைப்படம்

வணக்கம்
இலக்கியக் கூடலில் ஒரு பகுதி


Sunday, July 12, 2009

மல்லிகையில் யுகமாயினி


வணக்கம்
44 ஆண்டு கால பாரம்பரிய இலங்கை 'மல்லிகை'யில் இடம் பெற்ற யுகமாயினியின் ஆய்வுரை இது.
மல்லிகை ஜீவா, நவாஸ், கோரி ஆகியோருக்கும், யுகமாயினியை வளர்த்தெடுக்கும் நன்னெஞ்சங்களுக்கும் நன்றி. சித்தன்

Thursday, July 2, 2009

Saturday, April 18, 2009

DINAMANI 19.04.09

Friday, April 17, 2009

Monday, March 16, 2009


ஆஸ்திரேலியாவில் ஒன்பதாவது இலக்கிய விழா.ஏப்ரல் 11 - ஆம் தேதி நடைபெறவுள்ள இவ்விழாவில் மாணவர் அரங்கு, கருத்தரங்கு, கவியரங்கு,கலையரங்கு ஆகியனவற்றுடன் நூல் இதழ் விமர்சன அரங்கும் இடம் பெறவுள்ளன.இம்முறை மல்லிகை 44 - ஆவது ஆண்டு மலர்,ஞானம் நூறாவது இதழ் யுகமாயினி மாத இதழ் ஆகியனவற்றுடன்,டென்மார்க்கிலிருந்து இவ்விழாவுக்கு வருகை தரும் வி.ஜீவகுமாரன் எழுதியுள்ள புதிய நாவல் மக்கள்...மக்களால்...மக்களுக்காக மற்றும் லண்டன் எழுத்தாளர் முல்லை அமுதன் தொகுத்துள்ள, மறந்த 44 படைப்பாளிகளைப் பற்றிய இலக்கியப் பூக்கள் ஆகியன விமரசிக்கப்படவுள்ளன --- முருகபூபதி

Friday, March 13, 2009

Tuesday, March 3, 2009

மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தின் சிறுகதை பயிலரங்கம்-கே.பாலமுருகன்


கடந்த மாதம் 14-15 ஆம் திகதிகளில் தேசிய பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் இரண்டு நாள் சிறுகதை பயிலரங்கம் கோலாலம்பூரில் நடந்தது. நாட்டின் மூத்த எழுத்தாளரான ரெ.கார்த்திகேசு அவர்கள் பட்டறையை வழிநடத்தினார். சுமார் 20 இளைஞர்கள் இந்தப் பட்டறையில் கலந்துகொண்டனர்.
சல்மா, முனிஸ்வரன்(மலாயாப்பல்கலைக்கழகம்), காமினி கணபதி, விக்னேஸ்வரன், ஈஸ்வரி, சத்யாவாணி போன்ற இளையவர்கள் இலக்கியத்தின் பால் ஆர்வமுள்ளதால் இந்தப் பட்டறையில் கலந்துகொண்டு முழுநேர ஈடுபாட்டை வெளிப்படுத்தினர்.
முதல்நாள் பட்டறையில் சிறுகதையின் தொடக்கம், மொழிநடை, உலக சிறுகதைகள் ஒரு பார்வை என்று விரிவாகப் பேசப்பட்டது. இரண்டாம் நாள் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. அந்தக் கருத்தாரங்கில், ரெ.கார்த்திகேசு, மா.சண்முகசிவா, சை.பீர்முகமது, நான் என்று நால்வரும் பயிலரங்கத்தில் கலந்து கொண்ட இளைஞர்களுடன் இலக்கியம் குறித்தான எங்கள் மனநிலைகளையயும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டோம்.
என் அனுபவ பகிர்வு பெரும்பாலும் நவீன இலக்கியம் குறித்த விழிப்புணர்வை இவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கிலே அமைந்திருந்தது. உலகத் திரைப்ப்படன்ங்களில் கையாளப்ப்படும் உத்திகளை மேற்கோள் காட்டி அவர்களின் பார்வைக்கு அறிமுகப்படுத்தினேன். இன்றளவும் அகிரா குரோசாவா, சத்ய ஜித்ரே, அடூர் கோபாலகிருஷ்ணன் போன்றவர்களின் சினிமாக்கள் வாழ்வை மிக நெருக்கமாக அணுகுவதுடன், வாழ்வை பார்வையிடும் உத்திகளை மாற்றுக் கோணத்தில் காண்பிப்பத்துடன், பார்வையாளனின் கவன நோக்குகளையும் வளர்த்தெடுக்க்கக்கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளது எனலாம். இங்கிருந்து நவீன உத்திகளைப் புரிந்து கொள்ள தொடங்கினாலும், அது சிறப்பானதாகவே கருதலாம்.

கே.பாலமுருகன்
மலேசியா